சோகம்.. வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி அதிமுக நிர்வாகி உயிரிழப்பு !!

 
thiyagarajan

வாய்க்காலில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த அதிமுக நிர்வாகியின் உடல் மீட்கப்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேவதானத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (55). இவர் குளித்தலையில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். தியாகராஜன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் காலை வழக்கம் போல் வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். அவர் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு எதிர்பாராத விதமாக வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.

அப்போது தியாகராஜன் நீருக்குள் அடித்து செல்லப்பட்டு காணாமல்போனார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரைத் தேடி வாய்க்காலுக்கு வந்துள்ளனர்.

ds

அங்கு வாய்க்கால் படித்துறையில் அவரின் செருப்பு, துண்டு இருப்பதை மட்டும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வாய்க்கால் நீரில் அடித்து சொல்லப்பட்டாரா என்று முசிறி தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஒருநாள் முழுவதும் தேடி வந்த நிலையில் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து மறுகாலையில் மீண்டும் அவரது உடலை தேடும் பணி துவங்கியது.

எனினும் நீண்ட நேரம் ஆகியும் அவரது உடல் எங்கு தேடியும் அகப்படவில்லை. இந்த நிலையில் அவரது உடல் மருதூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வாய்க்கால் கரையில் மிதப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் அங்கு சென்ற குளித்தலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web