பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்.. பிரியாணி சாப்பிட்ட பெண் பலி! சோகத்தில் கணவரும் தற்கொலை!

 
தர்மபிரபு

பிறந்தநாள் விழாவில் சந்தோஷமாக கலந்து கொண்டு, பிரியாணி சாப்பிட்டு விட்டு, வீடு திரும்பிய மனைவி, வழியில் மாரடைப்பு ஏற்பட்டு, மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ந்த கணவன், குழந்தைகளை விட்டு விட்டு, தூக்கில் தொங்கிய படி தற்கொலை செய்து கொண்டது சென்னை அயனாவரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம்  மேட்டுத் தெருவில் வசித்து வரும் தம்பதியர் தம்புசாமி (53), பவானி (47). இந்த தம்பதிக்கு யுவஸ்ரீ (23) என்ற மகள் உள்ளார். தம்புசாமி பிளம்பராக வேலை பார்த்து வந்தார்.

பிரியாணி
இந்நிலையில் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவானி நேற்று அங்கு பிரியாணி சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு உறவினருடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் பவானியை அருகில் இருந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். பவானியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தம்புசாமிக்கு, மனைவி பவானியின் இறப்பு செய்தி கிடைத்தது. விரைந்து சென்ற தம்புசாமியும், மகளும் மருத்துவமனையில் பவானியின் உடலை பார்த்து கதறி அழுதனர். அதன் பின்னர் தம்புசாமி அங்கிருந்து திடீரென்று காணாமல் போனார். இதனால் பயந்து போன மகள், அவரது செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

அதன் பின்னர் மகள், தனது  தாய் பவானியின் உடலை உறவினர்கள் உதவியுடன் வீட்டிற்கு எடுத்த வந்த போது அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி இறந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத தம்புசாமி, சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகள், ஒரே நேரத்தில் தாயையும், தந்தையையும் இழந்து கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்த அயனவாரம் போலீசார் தம்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web