கர்நாடகாவில் சோகம்! தெரு நாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் பலி!! அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த துயரம்..

 
நாய்கள்

கர்நாடகாவில் 4 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டம்  தோனபகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சையது நசருல்லா.  விவசாயியான இவருக்கு நசருல்லாவுக்கு சையத் மதானி என்ற 4 வயது மகன்   உள்ளார். இதனிடையே நசருல்லா நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது வயலுக்கு சென்றுள்ளார்.

நாய்கள்

 

தனது தந்தை வயலுக்கு டிராக்டரில் செல்வதை கண்ட    மதானி, தானும் அதில் போக வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரது பின்னால் ஓடியுள்ளார். டிராக்டர் ஓட்டிக்கொண்டு போன நசருல்லா இதை கவனிக்கவில்லை என தெரிகிறது. சிறுவன் மதானி   தெருமுனையில் ஓடிவருவதை கண்ட தெரு நாய்கள் சிறுவனை துரத்த ஆரம்பித்தது. இதில் அலறி அடித்து ஓடிய சிறுவனை நாய்கள் விடாமல் துரத்தி சென்று கடித்து குதறியுள்ளது.   சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து நாய்களை விரட்டி அடித்து சிறுவன் மதானியை மீட்டுள்ளனர்.

நாய்கள்

இதில் பலத்த காயமடைந்த மதானி   அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சை சிவமொக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் மதானி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மீது விசாரணை நடத்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  பல முறை கிராம பஞ்சாயத்திடம் புகார் அளித்தும் தெரு நாய் தொந்தரவு குறித்து ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இதுப்போன்ற துயர சம்பவம் நிகழாமல் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

From around the web