சோகம்.. விபத்தில் சிக்கிய லாரி! பெட்ரோலை சேகரித்த 11 பேர் தீ விபத்தில் பலி!

 
லாரி தீவிபத்து

பரிதாபமாக 11 பேர் மிசோரம் மாநிலத்தில் தீ விபத்தில் பலியானார்கள். விபத்து ஒன்றில் சிக்கிய லாரியில் இருந்து கசிந்து கொண்டிருந்த பெட்ரோலை சேகரித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராமல் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அதில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 

மிசோரம் மாநிலத்தில் உள்ள அய்சாவல் மாவட்டத்தில் கடந்த 29ம் தேதி துய்ரியால் பகுதியில் லாரி ஒன்று 22 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் ஏற்றி கொண்டு சென்றது. திடீரென்று லாரி விபத்தில் சிக்கி, அதில் இருந்த பெட்ரோல் கசிந்து நெடுஞ்சாலையில் ஆறாக ஓடியது.

விபத்து

இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் ஓடிச்சென்று வாளி உள்ளிட்டவற்றை எடுத்து வந்து கசியும் பெட்ரோலை சேகரிக்க முயற்சித்தனர்.

அப்போது ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் காயமடைந்தனர். அதோடுமட்டுமல்லாமல் அங்கிருந்த வாடகை கார் ஒன்றும், 2 மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தன. 

விபத்து

உடனடியாக விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிலர் உயிரிழந்தனர். எனவே உயிரிழப்பு தற்போது 11 ஆக அதிகரித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web