ரயில் பயணிகளே நோட் பண்ணிக்கோங்க!! எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!!

 
ஆன்மீக ரயில்

தெற்கு ரயில்வே குறிப்பிட்ட வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதனால் கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் நாகர்கோவில்-திருநெல்வேலி(வண்டி எண்:06641) செப்டம்பர் 25ம் தேதி முழுவதுமாக ரத்து. 
திருநெல்வேலி-தூத்துக்குடி(06668) இடையே காலை 7.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 25ம் தேதி முழுவதுமாக ரத்து 
தூத்துக்குடி-திருநெல்வேலி(06667) இடையே மாலை 6 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர்  25ம் தேதி முழுவதுமாக ரத்து 
திருநெல்வேலி-நாகர்கோவில்(06642) இடையே காலை 6.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர்  25ம் தேதி முழுவதுமாக ரத்து  

ரயில் முன்பதிவு
பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள் 


தாம்பரம்-நாகர்கோவில்(வண்டி எண்: 20691) அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 19ம் தேதி முதல்  27ம் தேதி வரை திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து 
இந்த ரயில் சேவை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். 
நாகர்கோவில்-தாம்பரம்(20692) இடையே  பிற்பகல் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர்  20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நாகர்கோவில்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து. 
திருச்சி-திருவனந்தபுரம்(22627) இடையே காலை 7.20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 20  முதல் 28  வரை திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து இந்த ரயில் சேவை திருச்சியில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். 

ரயில்
திருவனந்தபுரம்-திருச்சி(22628) இடையே  இயக்கப்படும் அதிவிரைவு ரயில் செப்டம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை திருவனந்தபுரம்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து
திருநெல்வேலியில் இருந்து பிற்பகல்  2.30 மணிக்கு திருச்சி புறப்பட்டு செல்லும். சென்னை சென்ட்டிரல்-நாகர்கோவில்(12689) இடையே இரவு 7 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 23ம் தேதி திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து. 
நாகர்கோவில்- சென்னை சென்ட்டிரல்(12690) இடையே இரவு 7.30 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர்  25ம் தேதி நாகர்கோவில்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து. 
புதுச்சேரி-கன்னியாகுமரி(16861) இடையே பிற்பகல்  12 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்  செப்டம்பர் 25ம் தேதி திருநெல்வேலி-கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து.
கன்னியாகுமரி-புதுச்சேரி(16862) இடையே பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்  செப்டம்பர் 26ம் தேதி கன்னியாகுமரி-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web