ரயில் சேவைகள் திடீர் ரத்து! அவசர நிலை பிரகடனம்! இங்கிலாந்து அரசு அறிவிப்பு!!

 
ரயில்

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின சில பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. மேலும், நகர்புறங்களில் இரவு நேரத்தில் அதிக அளவு வெப்பம் நிலவும் எனவும் எச்சரித்துள்ளது. 

2019-ல் இதுவரை இல்லாத அளவுக்கு 38.7 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் இங்கிலாந்தில் பதிவானது. ஆனால், தற்போதைய வெப்ப அலை உச்சத்தை எட்டுவதால் நாளை 40 டிகிரி செல்சியஸை தொட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து

இதனையடுத்து, அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர்காக்கும் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பெரும்பகுதியை வெப்பம் உள்ளடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web