உலக அழகி போட்டி நடத்தும் நிறுவனத்தை வாங்கிய திருநங்கை !! குவியும் பாராட்டுக்கள்!!

 
ஜகாபோங்

ஒவ்வொரு ஆண்டும் பிரபஞ்ச அழகி போட்டிகளை தாய்லாந்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பங்குதாரராக இருந்து வருகிறார். ஜகாபோங் தாய்லாந்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை உருவாக்கும் நிறுவனங்களில் குறிப்பிடத்தகுந்தது ஜேகேஎன் குளோபல் குழுமம். இந்த நிறுவனத்தின் தலைவர் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தி வரும் திருநங்கை.

ஜகாபோங்

இவர் புராஜெக்ட் ரன்வேயில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஷார்க் டேங்க் ஆகியவற்றிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.71 ஆண்டுகளாக  நடத்தப்பட்டு வரும் பிரபஞ்ச அழகிப்போட்டியை நடத்தும் நிறுவனத்தின் முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப்  பங்குதாரராக இருந்ததாக கூறப்படுகிறது.திருமணமான பெண்கள் மற்றும் தாய்மார்கள் பட்டத்துக்கான போட்டி அடுத்த ஆண்டு முதல் நடத்தப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

ஜகாபோங்

பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் இந்த போட்டிகள் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பப்படுகிறது.இதற்கு முன்னர் திருமணமாகாத மற்றும் குழந்தை இல்லாத பெண்களுக்கு மட்டுமே போட்டி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதைத்தொடர்ந்து திருநங்கை தொழில் அதிபருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web