திருச்சி மாவட்ட ஆட்சியர் அதிரடி…. ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்….

 
பதவி நீக்கம்

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து ஊராட்சி தலைவர் விக்னேஷ்வரன் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் பலவகை வரி தொகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்ததால் அதிரடியாக பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. வரிவசூல், பிளான் அப்ரூவலுக்கு ஆன்லைன் ரசீது இல்லாததால் தலைவர்கள், கிளார்க்குகள் தனித்தனி ரசீது புத்தகம் வைத்துக் கொண்டு வரி வசூல் செய்தும், பிளான் அப்ரூவலும் கொடுத்தும் வருகின்றனர். இந்நிலையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் விக்னேஷ்வரன் வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் பலவகை வரி தொகைகளை ஊராட்சி நிதியில் செலுத்தாமல் மோசடி செய்தது தெரிய வந்தது.

மாவட்ட ஆட்சியர்

இதுகுறித்து உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரின் பேரில் ஆட்சியர், ஊராட்சி மன்ற தலைவர் விக்னேஸ்வரனுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினார். அதில், 'மல்லியம்பத்து ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து செலவுச் சீட்டுகள் இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும், போலியான ரசீதுகள் மூலம் ரூ.74 லட்சம் கையாடல் செய்து முறைகேடு நடந்துள்ளது. ஊராட்சித் தலைவராக பதவி ஏற்றபோது எடுத்த உறுதிமொழியினை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டு உள்ளதால் இக்குறைகளுக்கு விளக்கம் கோரப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர்

15 தினங்களுக்குள் உரிய ஆவணங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று கூறியிருந்தார். விளக்கம் கோரப்பட்டு 4 மாதமாகியும் உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிக்கப்பட வில்லை. அதனைத் தொடர்ந்து ஆட்சியர்    விக்னேஷ்வரனை   மலலியம்பத்து ஊராட்சி மன்றத்தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அதிரடியாக  உத்தரவிட்டுள்ளது.

From around the web