திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு! நீதிமன்றத்தில் ஆஜரான 12 ரெளடிகள்!

 
ராமஜெயம்

ஏறக்குறைய 10 வருடங்களுக்கு பிறகு இறுதி கட்டத்தை எட்டுகிறது அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு. இத்தனை ஆண்டுகளாக குற்றவாளிகளை நெருங்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 12 பேருக்கு இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளதால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ரவுடிகள் சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார் சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், லெஃப்ட் செந்தில் (கடலூர் மத்திய சிறையில் உள்ளவர் இவர் ஆஜராகவில்லை)மீதமுள்ள 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2012, மார்ச் 29ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம்,  திருச்சி கல்லணை சாலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். 

ராமஜெயம் கொலை வழக்கு: ரூ. 50 லட்சம் சன்மானம் உறுதி.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீரங்கம் போலீசாருக்கு எந்தத் துப்பும் கிடைக்காத நிலையில், ‘சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என மதுரை உயர் நீதிமன்றத்தில் ராமஜெயத்தின் மனைவிலதா மனுத்தாக்கல் செய்திருந்தார். 

பின்னர் சி.பி.ஐ விசாரணையிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவால், இந்த வழக்கு மீண்டும் தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டியின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வசம் சென்றது.

தற்போது சி.பி.சி.ஐ.டி சிறப்பு புலனாய்வு டி.ஜி.பி ஷகில் அக்தர் மேற்பார்வையில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான குழு, ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வருகிறது. 

ராமஜெயம் கொல்லப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலானதால், குற்றவாளிகளைக் கண்டுப்பிடிப்பதில் சிக்கல்கள் நீடிக்கின்ற நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீசார், 2012ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் கோலோச்சிய ரவுடிகளின் பட்டியலில், சந்தேகத்துக்குரியவர்களை மட்டும் விசாரித்து, அதில் 12 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்த 12 பேருக்கும் உண்மைக் கண்டறிய சோதனை நடத்த அனுமதி கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் இன்று நவம்பர் 1ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

கே.என்.நேரு

12 ரவுடிகளின் சார்பாக அலெக்ஸ்சியஸ் என்ற வழக்கறிஞர் நீதிபதி முன் வாதாடி உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

ரவுடி ராஜ் சார்பில் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், ராமஜெயம் கொலை வழக்கில் 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றார்.

சிறப்பு புலனாய்வு குழு  சமர்பித்த மனுவில் ராமஜெயத்தின் உறவினர்களோ அல்லது அவரது மனைவியோ 13 நபர்களிடம் உண்மை கண்டறிய சோதனை நடத்த கோரி இருக்க வேண்டும் . ஆனால் எந்த முகாந்திரம் இல்லை. இந்த கொலை வழக்கில் சந்தேகப்படக்கூடிய நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழு எஸ் பி ஜெயக்குமார் மனு தாக்கல் செய்யாமல் விசாரணை அதிகாரி டிஎஸ்பி மதன் தாக்கல் செய்திருக்கிறார் என வாதிட்டார்.

முக்கியமாக ராமஜெயம்  மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று அவர் உறவினர்கள் குறிப்பிடவில்லை. உடற்கூறு ஆய்வில் அவர் மதுகுடிப்பவர் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றார். இதை அடுத்து நீதிபதி சிவகுமார் இவ்வழக்கின் விசாரணை வருகிற நவம்பர் 7ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web