நடுவானில் கோளாறு! அவசரமாக பாகிஸ்தானில் தரையிறங்கிய இந்திய விமானம்!

 
இண்டிகோ

கடந்த 15 நாட்களில், இண்டிகோ விமானம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அடிக்கடி தொழில் நுட்ப கோளாறு ஏற்படுவதால், எச்சரிக்கப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் விமானம் , ஷார்ஜாவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஐதராபாத் நோக்கி புறப்பட்டது.  நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால் அவசர அவசரமாக விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரில் இருந்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்கு 130 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது நடுவழியில் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.

 இதனை அறிந்த  விமானி, விமானத்தை பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசர அவசரமாகமாக தரையிறக்கினார். இந்நிலையில் விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, விமான நிலையத்தில் இருந்த அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் மற்றொரு விமானத்தின் மூலமாக பயணிகள் பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாத்துக்கு அழைத்து வரப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாகவும், இண்டிகோ விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப காரணங்களினால், பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் திடீரென தரை இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே இண்டிகோ விமானங்களில், 15 முறை இப்படி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web