முடிஞ்சா என் கூட ஆடிப் பாரு! பட்டையைக் கிளப்பிய பாட்டியின் நடனம்!

 
பெசண்ட்நகர் பாட்டி

நாலு வீடு தள்ளியிருக்கிற பெட்டிக்கடைக்கு செல்வதற்கு கூட வண்டியை எடுக்கும் தலைமுறையில் வாழ்கிறோம் நாம். இந்நிலையில், சென்னையின் நிலையை எல்லாம் சொல்லி  மாளாது. 
ஆனால், அடுத்த தலைமுறையினர் இது பற்றி எல்லாம் யோசிக்க துவங்கி இருக்கிறார்கள். ஒரு தெரு முழுக்கவே ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லாமல் ப்ரீயாக இருக்கும்படி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

பெசன்ட்நகர் கடற்கரை யோகா

ஆரம்பத்தில் இப்படி பெசன்ட்நகர்  கடற்கரை சாலையில் துவங்கி, இப்போது அண்ணாநகர் போன்ற பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவடைந்திருக்கிறது. அந்த தெருக்களில் இளைஞர்கள், மாணவிகள், தாத்தா - பாட்டி, குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

பாட்டு பாடலாம், நடனமாடலாம். யோகா, சிரிப்பது, குதிப்பது என இஷ்டம் போல உங்க மனசையும், உடலையும் ரிலாக்ஸ் செய்து கொள்ள முயற்சிகளில் ஈடுபடலாம். அந்த தெருவில் எந்த வாகனமும் நுழையாது. இந்த திட்டத்திற்கு வரவேற்பும், ஆதரவும் பெரியளவில் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி, சென்னை பெசன்ட் நகரில் அப்படி ரிலாக்ஸ் செய்த நடன குழுவினருடன் உற்சாகமாக பாட்டி ஒருவர், அங்கு இருக்கும் இளைஞர்களுக்கு ஈடுகொடுத்து நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முடிஞ்சா என்கூட ஆடி பாரு… என்கிற ரேஞ்சுக்கு பட்டையை கிளப்பிய பாட்டியின் நடனத்தைப் பலரும் பார்த்து, பாராட்டி, ஷேர் செய்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web