அடிதூள்!! பால் விலை உயர்வு நிறுத்தி வைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
பால்

தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் பாலின் விற்பனை விலையும் கடந்த சில நாட்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. இதன்படி ஆரஞ்சு பாலின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள் இடையே கடும் அதிருப்தியை உருவாக்கியது.

பால்

தமிழக அரசினை தொடர்ந்து கர்நாடகாவிலும் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று கர்நாடக பால் கூட்டமைப்பு முதல்வருக்கு  கோரிக்கை விடுத்தது. அத்துடன் பால் விலை உயர்வு பட்டியலையும் இணைத்து அனுப்பியது. இந்நிலையில், இந்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கன்னட தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொம்மை

ஆனால் இதனை கர்நாடக அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து முதல்வர்  பொம்மை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் , "கர்நாடக பால் கூட்டமைப்பு பால் விலையை உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த பரிசீலணை நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்குள் பால் கூட்டமைப்பு பால் விலை உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதை நிறுத்தி வைக்கும்படி பால் கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்துவது தொடர்பாக நவம்பர் 20ம்  தேதிக்கு பிறகு ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பால் விலை உயர்த்தப்பட்டால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web