அடிதூள்!! தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள்!! எந்தெந்த இடங்களில் தெரியுமா.?

 
புதிய பேருந்து நிலையம்

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக பேருந்துகள் வாங்குவதும் நான்கு வழிச்சாலை திட்டத்தை 8 வழிச்சாலையாக மாற்றும் நடவடிக்கையிலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஊருக்குள் இருக்கும் பேருந்து நிலையங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்பட்டு வருகிறது.  

புதிய பேருந்து நிலையம்

இந்தநிலையில்  தமிழகத்தில் புதிதாக 10 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அதற்காக ரூபாய் 115 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதிய பேருந்து நிலையம்

அதன் படி திரூப்பூரில் ரூ.26 கோடி  மற்றும் ஒசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  அரியலூர், வேதாரண்யம், மேலூர், பட்டுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சி உள்ளிட்ட 8 நகராட்சிகளிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த 10 பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று    எதிர்பார்க்கப்படுகின்றது.

From around the web