பிரபல தமிழ் பட இசையமைப்பாளர் திடீர் மரணம்! திரையுலகினர் அஞ்சலி!

 
ரகுராம்

தமிழ் சினிமாவில், இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் நிலையில், இசையமைப்பாளரான ரகுராம் திடீர் உடல்நலக் குறைவால் காலமானதாக வெளியான செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இசையமைப்பாளர் ரகுராமுக்கு வயது 38.

2017ல் சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில், விதார்த் நடித்த, ஒரு கிடாரியின் மனு படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானவர் ரகுராம். இப்படத்தை தொடர்ந்து சுரேஷ் சங்கைய்யா இயக்கி வரும் ‘சத்திய சோதனை’ படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். 

Raghuram

சென்னை வடபழனியை சேர்ந்த இவர், திரைப்படங்கள், ஆல்பம், பாடல்கள் உள்ளிட்டவற்றிற்கு இசையமைத்து வந்த ரகுராம் பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாமலேயே அனைத்து பணிகளையும் செய்து வந்திருக்கிறார். 

இதனிடையே சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதே போல் காலில் இருந்த ஒரு பிரச்சனையால் நடக்க முடியாமல் அவதிப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இசையமைப்பாளர் ரகுராம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி ரகுராம் நேற்று உயிரிழந்தார். 

RIP

திரையுலகில் வளர்ந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ரகுராமின் மறைவு அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ரகுராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web