மறக்கமுடியாத கணவர்.. தீர்த்துக்கட்டிய மனைவி.. பகீர் பின்னணி !!

 
murder

கணவரை கொன்று உடலை வீசி சென்ற மனைவி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வாடா பகுதியில், கடந்த 20ஆம் தேதி சாலையோரம் ஆண் சடலம் கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, பிரேத பரிசோதனையில் அந்நபர் கழுத்தை நெரித்து தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்நபரின் அடையாளம் மூலம் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது மனைவி உள்பட 5 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

murder

போலீசார் அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது கொலை செய்யப்பட்டவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கள்ளக்காதலை அவர் கைவிட மறுத்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த அவரது மனைவி 4 பேரின் உதவியுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்தும், தலையில் தாக்கியும் கொலை செய்ததும், பின்னர் உடலை வீசி சென்றதும் தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் மனைவி உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web