மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு பாரபட்சம்.. முதலமைச்சருக்கு பறந்த புகார் !!
Sun, 22 Jan 2023

கடலூரில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தங்குவதற்காக கடலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு பழைய கட்டிடத்தில் உள்ள சிறப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றார். ஆனால் அந்த அறை, போதிய பராமரிப்பின்றியும், கழிப்பறைகளில் துர்நாற்றமும் வீசியுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புதியக் கட்டிடத்தில் உள்ள சிறப்பு அறைக்கு சென்றுள்ளார். தமிழக அமைச்சர்கள் இருவர் வருவதால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியத்தை தொடர்புகொண்டு மத்திய இணையமைச்சர் முருகன் பேசியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னரே அறை ஒதுக்கீடு தொடர்பாக முன்பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் கூறிய பதிலையே ஆட்சியரும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆவசமடைந்த அமைச்சர் முருகன், அங்கிருந்து புறப்பட்டு தனியார் ஓட்டலுக்குச் சென்றுள்ளார். இதுதொடர்பாக, தலைமைச் செயலரிடம் முறையிட்டுள்ளார். மேலும், முதலமைச்சரின் உதவியாளரிடமும் முறையிட்டு விட்டு, மெயில் மூலமும் புகார் அளித்துள்ளார் எனவும் கூறுகின்றனர். இது குறித்து தொடர்ந்து நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
From around the web