தமிழகத்தில் தேவாலயங்களை சீரமைக்க ரூ.3 லட்சம் வரை நிதியுதவி! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
கிறிஸ்து சர்ச்

தமிழகத்தில் இயங்கி வரும் தேவாலயங்களில், அவை சொந்த கட்டிடங்களில் இயங்கி வந்தால், அவற்றை சீரமைக்க ரூ.3 லட்சம் வரையில் நிதியுதவி வழங்கப்படும் என்று சென்னை  மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். 

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ தமிழகத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்ப்பதற்கும், சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கும் அரசின் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை இருப்பின் அந்த தேவாலயங்களுக்கு ரூ.1 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கும் தேவாலயங்களுக்கு ரூ. 2 லட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் அவற்றிற்கு ரூ. 3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி...உடனே விண்ணப்பிக்கலாம்  - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற, கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து நிதியுதவி எதுவும் பெறவில்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் இருந்து திட்ட மதிப்பீடு பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு, 5 ஆண்டுகள் முடிந்த பின்னரே மறுமுறை நிதியுதவி பெற விண்ணப்பிக்க வேண்டும்.

தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி...உடனே விண்ணப்பிக்கலாம்  - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் http://www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மூலம், விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதி மற்றும் அரசாணையில் உள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படும்.

கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் கூடிய முன்மொழிவு சிறுபான்மையினர் நல இயக்குநரின் பரிந்துரைக்கு அனுப்பப்படும். மேலும், விவரங்களை அறிந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்கீழ் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுக வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web