பயனர்களே உஷார்!! ஆண்ட்ராய்டு போன்களில் வங்கி கணக்கு திருட்டு!!

 
ஆண்ட்ராய்டு

இந்தியாவில் இணையதளத்தை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட் போன் பயன்பாடும் அதன் வழியாக வங்கி சார்ந்த பண பரிவர்த்தனைகள் இணைய வர்த்தகம் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதன் மூலமாக சைபர் தாக்குதல்கள் அதிகளவில் நடக்க வாய்ப்பு இருக்கும் ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறது.கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் அதிகளவில் பரவி வருகிறது. போலி செயலிகள் மூலமாக ஒருவரின் ஸ்மார்ட் போனில் களமிறங்கும் இந்த வைரஸ் வங்கி விவரங்கள் உட்பட  ரகசிய தகவல்களை திருடுகிறது. இதனால், வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும் அபாயம் எழுந்துள்ளது. 

கடும் உளைச்சலில் பொதுமக்கள்!! 3 நாட்களுக்கு மொபைல் சேவைகள் ரத்து!!

மேலும், கேமராவில் தானாக வீடியோ பதிவு செய்வது போன்ற தனிப்பட்ட அந்தரங்க தகவல் திருட்டு, இந்த வைரஸ் மூலம் நடக்கலாம். இந்த சோவா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட செயலிகளை குறிவைத்து செயல்படுவதால் அதிகாரபூர்வ தளத்தில் மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.இந்த வைரஸ், ஆன்ட்ராய்டு போனுக்குள் ஊடுருவி, அதை முடக்கி விடக்கூடியது. 'செட்டிங்ஸ்' பகுதிக்கு சென்று வைரசை நீக்குவதும் கடினம். நீக்கினாலும், 'இந்த செயலி பாதுகாப்பானது' என்ற செய்தியுடன் திரும்ப வந்து விடும்.

girl mobile பெண் மொபைல், வாட்ஸ் அப் செல்போன்

எனவே, வாடிக்கையாளர்கள் ஆபத்தான செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். முறையான 'ஆப் ஸ்டோர்' மூலமாக செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலிகளின் விவரங்களை படித்து பார்க்க வேண்டும். அவ்வப்போது 'அப்டேட்' செய்ய வேண்டும். செயலிகள் கேட்கும் தேவையற்ற அனுமதிகளை அளிக்கக்கூடாது. நம்பகத்தன்மையற்ற வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடாது. மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் சந்தேகத்துக்குரிய 'லிங்க்'குகளை திறக்கக்கூடாது என்று இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழு அறிவுறுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web