வைரமுத்துவின் ”கள்ளிக்காட்டு இதிகாசம்” ஆங்கிலத்தில் !! துபாய் மாநாட்டில் வெளியீடு!!

 
வைரமுத்து

தமிழ் திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கவிப்பேரரசாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வைரமுத்து. இதுவரை 7500 திரைப்படப்பாடல்களை எழுதியுள்ள இவர் 7 முறை தேசிய விருதுகள் மற்றும் பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ளார். கவிஞர், பாடலாசிரியர் மட்டுமல்ல எழுத்தாளரும் கூட. இவர் கவிதை, நாவல் என மொத்தம் 37 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது கைவண்ணத்தில் வெளியான ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ நாவல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வைரமுத்து

இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலை 23 மொழிகளில் சாகித்ய அகாடமி நிறுவனம் மொழிபெயர்த்து வருகிறது. இந்தி, உருது, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை கீதா சுப்ரமணியம் மொழிபெயர்த்துள்ளார்.

துபாயில் உள்ள அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெற்ற ‘ரைஸ்’ மாநாட்டில் ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ என்ற கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெற்ற இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் அதனை பெற்றுக்கொண்டனர்

வைரமுத்து.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “துபாயில் இருக்கிறேன். உலகப் புகழ்மிக்க அட்லாண்டிஸ் ஓட்டல் ரைஸ் சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாடு. கள்ளிக்காட்டு இதிகாசத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘தி சாகா ஆஃப் தி காக்டஸ் லேண்ட்’ வெளியிடப்பட்டது; 32 நாட்டார் பெற்றுக்கொண்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web