வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகி சரமாரி குத்திக்கொலை! மாநில நிர்வாகி உட்பட 6 பேர் கைது!

 
கயத்தாறு

வாட்ஸ்-அப் குரூப்பில் யார் பெரியவர் என்கிற கருத்து மோதலில் பதிவிட்டதற்காக பெயிண்டர் வேலை செய்து வரும் சுரேஷ் என்பவரைக் குத்திக் கொலைச் செய்ததாக வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்தவர் ரேவதி. இவரது மகன் சுரேஷ்(20). திண்டுக்கல்லில் கேட்டரிங் படிப்பு படித்து வந்த சுரேஷ், கொரோனா ஊரடங்கு காலத்தில், படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார். 

அதன் பின்னர், படிக்காமல், கயத்தாறு பகுதியிலேயே சமையல் வேலையும், பெயின்டிங் வேலையும் செய்து வந்தவர், தூத்துக்குடி மாவட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தில் பொருளாளராக இருந்தார். 

சுரேஷ்

அந்த அமைப்பில் மாநில அமைப்பு செயலாளராக உள்ள பந்தல்ராஜ் (34) தலைமையில் ஒரு குழுவும், தென்மாவட்ட மகளிரணி தலைவியாக இருக்கும் அன்னலட்சுமி தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டு வருகின்றனர். பந்தல்ராஜ் ஆதரவாளர்களாக கயத்தாறைச் சேர்ந்த வெயில்முத்து, அஜித் கண்ணன் ஆகியோர் உள்ளனர். சுரேஷ், அன்னலட்சுமி ஆதரவாளராக இருந்துள்ளார்.

இந்நிலையில், வஉசி பேரவை என்ற அமைப்பை உருவாக்கி பன்னீர்குளத்தை சேர்ந்த சங்கர் தலைவராகவும், சுரேஷ் பொருளாளராகவும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செயல்பட துவங்கியுள்ளனர். புதிதாக அமைப்பு உருவாக்கியதற்கு பந்தல்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து, என்னை மீறி எப்படி பேரவை நடத்துவாய் என்று இருவரையும் எச்சரித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு இருந்துள்ளது. 

வாட்ஸ் - அப் குழுக்களிலும் இருவரும் எதிர் எதிர் கருத்துகளைப் பதிவிட்டு, யார் பெரியவர் என்கிற ஈகோ யுத்தம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டு திண்ணையில் ரேவதி, அவரது மகள் பிரியாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சுரேஷ், படுக்கை அறையில் செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பந்தல்ராஜூம், வேறு சிலரும் திடீரென சுரேஷுன் வீட்டுக்குள் நுழைந்து சுரேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றுகையில், எதிர்பாராத நேரத்தில் கத்தியை எடுத்து சுரேசை சரமாரியாக குத்தி கொலைச் செய்துள்ளனர். 

க்ரைம்

சுரேஷுன் அலறல் சப்தம் கேட்டு, திண்ணையில் அமர்ந்திருந்த ரேவதி, தடுக்க ஓடி உள்ளே சென்ற போது, ரேவதிக்கும் கத்தி குத்து விழுந்தது. பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

தகவலறிந்த விரைந்து வந்த போலீசார் சுரேஷையும், ரேவதியையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழியிலேயே சுரேஷ் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்து பந்தல்ராஜ் உட்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web