ரொம்ப பிஸி! அரசியலும் கிடையாது! கல்யாணமும் கிடையாது! நடிகை த்ரிஷாவின் தாயார் விளக்கம்!

 
சத்யராஜ் த்ரிஷா ப்ரியதர்ஷன்

இப்போதைக்கு திருமணம் குறிந்த எண்ணமே நடிகை த்ரிஷாவுக்கு இல்லை போல. கடந்த ரெண்டு நாட்களாக நடிகை த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார் என்கிற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த விளக்கத்தில் தான், நடிகை த்ரிஷாவின் கைவசம் எக்கச்சக்க படங்கள் இருப்பதாகவும், இன்னும் பல மொழிகளில் பான் இந்தியா படங்களில் எல்லாம் மகள் நடிப்பதற்கு பேசி வருவதாகவும் தெரிவித்தார் உமா கிருஷ்ணன். அவர் சொல்வதைப் பார்த்தால், எப்படியும் த்ரிஷாவின் கைவசம் இருக்கும் படங்களை எல்லாம் நடித்து முடிப்பதற்கே இன்னும் ஆறேழு வருஷங்கள் ஆகும். அதனால் இப்போதைக்கு நடிகை த்ரிஷா அரசியலுக்கும் வர மாட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 1999-ம் ஆண்டு மிஸ் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அதே ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, அமீர் இயக்கதில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

2 இன்னிங்சில் அட்டகாசமாக களமிறங்கும் த்ரிஷா?

அதன் பிறகு, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி முத்திரை பதித்துள்ள த்ரிஷாவிற்கு வயது 40-ஐ நெருங்கினாலும் இளமை குறையாமல் அதே அழகுடன் இருக்கிறார். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதைத்தவிர மேலும் இவர் கைவசம் தமிழில் ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை2 போன்ற படங்களும், மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் எனும் படம், தெலுங்கில் பிருந்தா என்கிற வெப்தொடர் என மூன்று மொழிகளிலும் படுபிசியாக நடித்து வருகிறார்.

2 இன்னிங்சில் அட்டகாசமாக களமிறங்கும் த்ரிஷா?

கடந்த சில வாரங்களாக த்ரிஷா அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து அரசியல்வாதியாக பொது வாழ்வில் நுழையப் போவதாக இணையத்தில் செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. அவரின் நண்பரான தளபதி விஜய் அவரை அரசியலில் நுழைவதற்கு ஊக்குவித்ததாகவும் சில தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், தனது மகள் அரசியலுக்கு வருவார் என்ற வதந்தியை மறுத்துள்ளார். மேலும், த்ரிஷா தனது நடிப்பில் பிஸியாக இருப்பதாகவும், விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் இன்னும் பல படங்களில் கமிட்டாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  எவர்கிரீன் நடிகை எந்த நேரத்திலும் தனது கரியரை மாற்ற மாட்டார் என்பதையும் உறுதி பட தெரிவித்து ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web