வீடியோ!! உள்வாங்கிய கடல்!! வெளியில் தெரிந்த சிலைகள்!! பக்தர்கள் பரவசம்!!

 
நந்தி சிலை

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர் முருகன் கோவில் . அறுபடை வீடுகளில் ஒன்றான இந்த கோவில் உலக பிரசித்தி பெற்றது. இன்று மகாதேவஅஷ்டமி நாள் . சிவபெருமான் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள திருச்செந்தூரில் சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதனை காண பக்தர்கள் திரளாக கோவில் மற்றும் கடற்கரையில் குவிந்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் குறிப்பிட்ட சில தினங்களில் திடீரென கடல் உள்வாங்குவது சமீபமாக அதிகரித்து வருகிறது. அதே போல் இன்றும் திருச்செந்தூரில் சிறிது தூரம் கடல் உள்வாங்கியது.  

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் கடலை பொறுத்தவரை  சுற்றுவட்டார கோவில்கள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பின்னமானாலோ, விரிசல் அடைந்தாலோ, செய்யும் போது குறைபாடுகள் ஏதாவது உருவானலோ அதனை கடலில் கொண்டு வந்து போட்டுவிட்டு செல்வர்.  இன்று கடல் உள்வாங்கி நீர்மட்டம் குறைந்த நிலையில், நந்தியின் சிலை ஒன்று வெளியே தெரிந்தது. இந்த சிலைகளை பக்தர்கள் ஆர்வத்துடனும், பரவசத்துடனும் பார்த்து செல்கின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web