வீடியோ!! அலட்டல் அலப்பறையுடன் ”அப்பத்தா” ரிட்டன்ஸ்!!

 
நாய்சேகர்


சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டராக ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது நகைச்சுவை பாணிக்கு சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ரசிகர்கள் ஏராளம். தாராளம். இவர் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய்சேகர் படத்தில் நடித்து வருகிறார். 2011ல் விஜயகாந்த் உடன்  மோதல், சம்பள சர்ச்சைகள் எனத் தொடங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

தற்போது  சுராஜ் கூட்டணியில் மீண்டும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் மூலமாக மறுபிரவேசம் செய்கிறார்.  லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் துரை  எழுதியுள்ள அப்பத்தா என்ற பாடல் படத்தின் முதல் சிங்கிளாக தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 

“நாய் சேகர் ரிட்டன்ஸ்” அலப்பறையாக வடிவேலு ரீஎன்ட்ரி!.
தமிழ் சினிமாவின் முண்ணனி ஹீரோக்கள் செய்யும் அனைத்து வித்தைகளையும்  தனது “அப்பத்தா “ பாட்டில் வடிவேலு செய்துள்ளார். இந்த பாட்டின் வரிகள் கடந்த 10 ஆண்டுகளாக அவர் வாங்கிய அடிகள், அவமானங்கள்,அவர்களை இழித்துரைக்கும் சொற்களாகவே அமைந்துள்ளது. ரசிகர்களிடையே இந்த வரிகள் வரவேற்பு பெற்றாலும் இத்தன வருஷத்துக்கு பிறகு இப்பதான் வர்றாரு.. கொஞ்சம் அடக்கி வாசிங்க என்ற கமெண்ட்டும் வருவதை தவிர்க்க முடியவில்லை. 

பாடல் வரிகளில் சில:


கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி

காண்றவர்சியே தாண்டின பிளான் பண்ணி 
சராசரி லைஃப் வாழ ஐ அம் நாட் ரெடி
சர்வைவ் பண்ண தேடிக்கிட்டேன் தனி வழி
நான் உண்டு என் வேலை உண்டு என இருந்தேன்
டாக்ஸால அந்த வேலையையும் இழந்தேன் எனப் பாடியுள்ளார். இப்பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web