வீடியோ!! போவோமா ஊர்கோலம்!! ஒரே சைக்கிளில் 9 பேருடன் ஜாலி ரைடு!!

 
சைக்கிளில் 9 பேர்


உலக மக்கள் தொகை நவம்பர் 15ம் தேதி 800 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அன்றைய தினம் ஒரு தந்தை  தன்னுடைய 9 குழந்தைகளையும்  சைக்கிளில் முன்னும் பின்னுமாக ஏற்றிக்கொண்டு ஓட்டிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்து உலக மக்கள் தொகை 800 கோடியை தொடுவதற்கு இதுபோன்ற நபர்களே காரணம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.டூவீலர்களில்  3 பேராக சென்றாலே காவல்துறை அதிகாரி சாலையில் மடக்கி பைன் போடுவதுடன் தேவையான அளவு டோசையும் கொடுத்து அனுப்புவார். ஆட்டோவில் 3 பேருக்கு மேல் ஏறினாலே மேலே கொஞ்சம் போட்டு கொடுங்கம்மா என்ற ஆட்டோக்காரரின் குரல் ஒலிக்கும்.  ஆட்டோவிலும் 10 பேர் வரை ஏற்றிச் சென்ற வீடியோக்களும் பதிவிடப்பட்டுள்ளன.  இரண்டே பேர்  மட்டுமே செல்லக்கூடிய சைக்கிளில் 9 சிறுவர் சிறுமிகளை அள்ளி அடைத்துக் கொண்டு அசால்டாக ஓட்டிச்செல்கிறார். பின் கேரியரில் 3 சிறுவர்கள் ,  முன்பக்க பார் கம்பியில் 2 குழந்தைகள், முன் சக்கரத்திற்கு மேல் உள்ள கூடையில் ஒரு குழந்தை, சைக்கிள் ஓட்டுபவரை முன்னும் பின்னுமாக பிடித்துக்கொண்டு 2 குழந்தைகள் என மொத்தம் 9 பேருடன் சைக்கிள்  ஓட்டம் தொடர்கிறது.  இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது.

சைக்கிளில் 9 பேர்

இந்த வீடியோ குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.  சைக்கிளில் ட்ரிபிள்ஸ் செல்வதற்கே மூச்சு வாங்கிவிடும். இவர் 9 பேருடன் அசால்ட்டாக ஓட்டுகிறாரே என வியந்து பாராட்டியுள்ளனர்.  சிலர் இவரை போல் பொறுப்பற்ற ஆட்களால் தான் மக்கள் தொகை மிதமிஞ்சியுள்ளது. இன்னும் சிலர் நெட்டிசன்கள் சைக்கிள் கம்பெனியையும் டயரின் தரத்தையும் பாராட்டியுள்ளனர்.  "இந்த சைக்கிள் நிறுவனமும்  டயர் நிறுவனமும் உண்மையில் ரொம்ப வலுவானதுதான்" என பதிவிட்டுள்ளனர். 

From around the web