வீடியோ!! பொதுமக்கள் மீது காறி உமிழும் திமுக பெண் கவுன்சிலர்!!

 
சேலம்

சேலம் மாநகராட்சி செவ்வாப்பேட்டை 30-வது வார்டில் அய்யாசாமி தெரு உள்ளது. இப்பகுதியின் கவுன்சிலர் திமுகவை சேர்ந்த அம்சா. இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் செல்லும் குழாய் பழுதாகி உள்ளது. இதுகுறித்து திமுக பெண் கவுன்சிலர் அம்சா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடிநீர் செல்லும் குழாயை விரைந்து சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார். 

சேலம்

உடனடியாக சம்பந்த இடத்திற்கு வந்த சேலம் மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாயில் உள்ள பழுதினை கண்டறிந்து மூன்று வீடுகளில் உள்ள குழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்து உள்ளனர். அதன்பின் இரண்டு வீடுகளில் உள்ள குடிநீர் குழாயை சரி செய்த மாநகராட்சி பணியாளர்கள் 3வது வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மாநகராட்சி பணியாளர்கள் மூன்றாவது வீட்டை சீர் செய்யாமல் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தநாள் திமுக பெண் கவுன்சிலர் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பணிகள் குறித்த ஆய்வு செய்தபோது மூன்றாவது வீடு குடிநீர் குழாயை சரி செய்வதற்கு பிளம்பரை அழைத்து வந்து சரி செய்துள்ளனர். பிளம்பருக்கான கூலியை கவுன்சிலர் கொடுப்பதாகவும், பைப் வாங்கிய செலவை வீட்டின் உரிமையாளர் ஏற்றுக்கொள்ளுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு வீட்டு உரிமையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் திமுக பெண் கவுன்சிலர் மற்றும் வீட்டின் உரிமையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் திமுக பெண் கவுன்சிலர் அவ்வீட்டின் உரிமையாளரை பார்த்து காரி உமிழ்ந்துள்ளார். அதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web