வீடியோ!! ஆழ்கடல் அதிசயம் “அவதார் 2 “ டிரைலர் வெளியீடு!!

 
அவதார் 2

ஹாலிவுட் திரையுலகில் 2009ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியானது அவதார். இந்த படம் உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தது. அத்துடன் வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. அத்துடன் ஆஸ்கர் விருதுகளையும் தட்டிச்சென்றது. அவதார்  திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கற்பனை காட்சிகள் ரசிகர்களை வேறொரு உலகத்திற்கே அழைத்து சென்றது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதார் படத்தை ரசித்து பார்த்தனர். உலகம் முழுவதும் அவதார் திரைப்படம் பெரும் வெற்றியை குவித்தது.

அவதார் 2

இந்நிலையில் தற்போது அவதார் திரைப்படத்தின் 2ம் பாகம் தயாராகி வருகிற டிசம்பர் மாதம் 16ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட உலகின் 160 பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.


அவதார் திரைப்படத்தில் காடுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது 2ம் பாகத்தில்  தண்ணீரை மையமாக படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று வெளியாகியுள்ள அவதார்: தி வே ஆப் வாட்டர்' படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தற்போது இதன் டிரெய்லர் இணையத்தில் வைராகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web