வீடியோ!! உயிரிழந்தவர்களுக்கு பிரேத கல்யாணம்!! விநோத பாரம்பரிய சடங்கு!!

 
பிரேதா திருமணம்

சடங்குகளை செய்து வருகின்றனர். விளக்கு ஏந்த சுற்றுவது, சப்தபதி போன்ற சடங்குகளை செய்தல் போன்ற அனைத்து திருமண சடங்கும் இவர்களுக்கு முறைப்படி செய்து வைக்கப்படுகிறது.பின்னர் தாலி கட்டும் முகூர்த்த நேரத்தில் தான் மணமக்களின் பெயர் என்ன என கேட்கப்பட்டு, மணமகனுக்கு சந்தப்பா எனவும் மணப்பெண்ணுக்கு சோபா எனவும் பெயர் சூட்டப்படுகிறது.


தாலி கட்டப்பட்டு, மணமக்களுக்கு அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வதித்து, பின்னர் ஆரத்தி எடுத்து வீட்டிற்கும் வரவேற்கின்றனர். இவ்வாறு திருமணத்தின் அனைத்து சடங்குகளையும் இரு குடும்பத்தாரும் முறைப்படி செய்து வைக்கின்றனர்.மேலும், திருமண விருந்து உணவாக பிஷ் ப்ரை, சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி உள்ளிட்ட பல வகை பொருள்களை வைத்து அறுசுவை விருந்து படைத்து மகிழ்ச்சியுடன் சாப்பிடுகின்றனர்.


இந்த திருமண சடங்கில் திருமணமானவர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்ற தனித்துவமான விதி உள்ளது. குழந்தைகள் மற்றும் திருமணம் ஆகாத நபர்கள் யாரும் இந்த சடங்கில் பங்கேற்கவோ நேரில் பார்க்கவோ அனுமதி இல்லை.பிறக்கும் போது உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு 30 ஆண்டுகள் கழித்து இவ்வாறு திருமணம் செய்து வைப்பது அவர்களின் ஆன்மாவை நீண்ட நாள்கள் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?