வீடியோ!! அப்படி போடு!! சிறுமிக்கு போட்டியாக தானும் குத்தாட்டம் போட்ட யானை!!

 
யானை

மனிதர்களை போல விலங்குகளும் சில நேரங்களில் செய்து நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அதில் பெரும்பாலும் வீட்டு விலங்குகளான நாய், பூனை, கிளி என வீட்டில் வளர்ப்பவை மனிதர்களை பார்த்து அப்படியே இமிட்டேட் செய்யும். காட்டு விலங்குகள் காட்டில் திரிந்து வாழ்வதால் அவற்றிற்கு மனிதர்களின் தாக்கம் கிடையாது. ஆனால் காட்டில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய விலங்கான யானை பல பல அற்புதங்களையும், ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தவல்லவை.


இது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி திபான்ஷு காப்ரா  சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சின்னஞ்சிறுமி ஒருத்தி யானையின் முன் நின்று கொண்டு நடன அசைவுகளை வெளிப்படுத்துகிறார். அவரை விட்டு சற்று தொலைவில் நின்றிருந்த யானை சிறுமியின் பக்கம் திரும்பி பார்த்து கொண்டேயிருந்தது. சிறிது நேரத்தில் யானை அதனை உள்வாங்கி, அந்த நடனத்திற்கு ஏற்ப உற்சாகமுடன் தனது காதுகளை உயரே தூக்கி, தலையை ஆட்டியது. எனினும், யானையின் பக்கத்தில் நின்றிருந்த நபர் இதுபற்றி  எதுவும் அறியவில்லை. இந்த வீடியோவுக்கு தலைப்பாக, யார் நன்றாக ஆடியுள்ளனர்? என்ற கேள்வியையும் ஐ.பி.எஸ். அதிகாரி  பதிவிட்டு உள்ளார்.

இதுவரை இந்த வீடியோவை 31.7 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் கண்டு ரசித்து உள்ளனர். பலரும் லைக் செய்துபலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  யானைக்கும், சிறுமிக்கும் இடையேயான அந்த இனிமையான தொடர்பை மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர் ஆச்சரியமடைய வைத்த யானை . இயற்கையின் அழகை படம்பிடித்து பகிர்ந்தது  நன்றி என ஒவ்வொருவரும் ஒரு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகளும் நன்றாக செய்தனர் என சிலர் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தததில் போரடித்தது.  ஆனால், இந்த வீடியோவை பார்த்த பின்பு புத்துணர்ச்சி பெற்றது போல் இருந்தது மிகவும் நன்றி என ஒரு மாணவி பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web