வீடியோ!! இன்னும் கஷ்டப்படறேன்!! கண்ணீர் விட்டு கதறி அழுத சமந்தா!!

 
சமந்தா


தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா. பல வெற்றி படங்களை கொடுத்து வரும் சமந்தா கதாநாயகிகளை மையமாக எடுக்கப்படும் திரைப்படங்களில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் தனது விவாகரத்துக்கு பிறகு வித்தியாசமான தோற்றங்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா, சமீபத்தில் தனது சமூக ஊடக பதிவின் மூலம் தான் மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதன் காரணமாக தான் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாக தெரிவித்த அவர்,  விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அந்த பதிவில் கூறியிருந்தார்.



நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளிவர உள்ள யசோதா திரைப்படத்தின் புரமோஷன் நவம்பர்  11ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ள இருக்கிறார். இதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒரு புதிய பதிவை மேற்கொண்டு இருக்கிறார்.

சமந்தா

அதில், ‘‘சில தினங்கள் நல்ல நாட்களாகவும் சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிற நிலையில் நான் உடல்நிலை உயிருக்கே ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இந்த கணம் வரை நான் சாகாமல் உயிருடன்தான் இருக்கிறேன். நான் சாகாமல் தான் இருக்கிறேன். மிகவும் கஷ்டமான நிலையில் தான் இருந்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள யசோதா திரைப்படத்தின் புரமோஷனில் சமந்தாவை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web