வீடியோ!! உங்க மகன இப்படி சொல்வீங்களா?! பேராசிரியரை வெளுத்து வாங்கும் மாணவன்!!

 
கசாப்

பள்ளிகளில் மாணவர்களின் அலட்டல் அலப்பறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் பாடு பெரும் திண்டாட்டமாக அமைந்திருப்பதாக ஆசிரியர்கள் கதறுகின்றனர். எது நடந்தாலும் மன அழுத்தம், சரியாக நடத்தவில்லை என ஆசிரியர்கள், பள்ளிகள் மீது குற்றம் சுமத்தி விடுவதுடன் சில நேரங்களில் விபரீதங்களும் நிகழ்ந்து விடுகின்றன. அதே போல் ஒரு சம்பவம்  கர்நாடகாவில்  மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 
கர்நாடக மாநிலம் பெங்களூரு உடுப்பியில் மனிப்பல் தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது.


இங்கு பாடம் நடத்திய பேராசிரியர்  இஸ்லாம் மதத்தை சேர்ந்த மாணவரிடம் பெயர் கேட்கிறார். சரியாக கேட்காததால் மாணவன் பெயரை கசாப் என்கிறார். ஆத்திரமடைந்த மாணவன் பேராசிரியரை சராமாரியான கேள்விகளால் துளைத்தெடுத்தான். அதில் நீங்கள் கூறியதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியாது. மதம் குறித்து மிகவும் கீழ்தனமாக நீங்கள் பேசக்கூடாது என்கிறான் மாணவன். அதற்கு ஆசிரியர் நீ என் மகன் போன்றவன் என்கிறார்.


பதிலுக்கு   உங்கள் மகனை தீவிரவாதியின் பெயர் சொல்லி அழைப்பீர்களா என மாணவன்  கேட்கிறான். என் தந்தை இவ்வாறு கூறினால் அவர் எனக்கு தந்தையே இல்லை  . வகுப்பறையில் இத்தனை பேர் முன்னிலையில் நீங்கள் என்னை எப்படி அவ்வாறு அழைக்கலாம்? என்கிறான். உடனே பேராசிரியர் என்னை  மன்னித்துவிடு    எனக் கேட்கவும், நீங்கள் கற்பிக்க வேண்டுமே தவிர மன்னிப்பு கேட்பது தீர்வாகாது. நீங்கள் சிந்திக்கிறீர்கள் ஆனால் உங்களின் செயல்பாடு மாறாது என்கிறான் மாணவன் விடாப்பிடியாக .

இந்த வீடியோ 45 விநாடிகள் தொடர்கிறது.  சமூகவலைதளங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில்  மாணவனை பயங்கரவாதி கசாப்பின் பெயரை கூறி அழைத்த பேராசிரியர் ரபிந்திரநாத்தை சஸ்பெண்ட் செய்த கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

From around the web