வீடியோ! +2 மாணவி மர்ம மரணம்! பள்ளியில் கலவரம்! போலீசார் மீது கல்வீச்சு!

 
ஸ்ரீமதி

மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்திற்கு எதிராக இளைஞர்கள் ஒன்று கூடியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோர்களுக்கு தகவல் கூறியது. இந்நிலையில், மாணவியின் மரணம் தற்கொலை கிடையாது என்று பெற்றோர்களும், உறவினர்களும் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது மாணவர் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மாணவி ஸ்ரீநிதியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பல போலீசார் காயமடைந்தனர். கள்ளக்குறிச்சியில் போராட்டம் வலுக்கிறது. கட்டுக்குள் கொண்டு வர வழி தெரியாமல் போலீசார் திகைத்து நிற்கின்றனர்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி இருந்தபடியே 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி, விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்று அவரது பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் பதறிப் துடித்தபடி பள்ளிக்கு விரைந்தனர். தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் மாணவி, 3வது மாடியில் இருந்து தானே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகின்றனர். பெற்றோர் தரப்பில் மாணவி தற்கொலையில் ஈடுபட்டிருக்க மாட்டார் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். மாணவியின் உறவினர்கள் பள்ளியின் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் அறிந்து பள்ளிக்கு வந்த போலீசார் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவியின் மரணம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் மாணவியின் உறவினர்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.


இதே பள்ளியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவன் மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில் அதே பள்ளியில் படித்த சக மாணவன் ஒருவன் அந்த மாணவனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், கடந்த 10 ஆண்டுகளில் இந்த பள்ளியில் சுமார் 7 மாணவர்களின் மரணம் இப்படி ஏற்பட்டிருப்பதாக அதிர வைக்கிறார்கள் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள். மாணவியின் மரணம் தற்கொலை கிடையாது என்று போராட்டங்கள் வலுக்கின்றன.

தொடர்ந்து 5வது நாளாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிற நிலையில், இன்று வன்முறை வெடித்தது. போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.  இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதில் மேலும் சிக்கல் நீடித்து வருகின்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web