வீடியோ! உயிரைப் பணயம் வைத்த போலீசார்! நொடிப் பொழுதில் தண்டவாளத்தில் இறங்கி காப்பாற்றினார்!

 
ரயில் தண்டவாளம்

அரசு ஊழியர்கள் தங்கள்  பொறுப்புகளை உணர்ந்து பணிபுரிவதில்லை என  பல இடங்களில் பொதுமக்கள் புலம்பி வருகிறார்கள். வங்கி, அஞ்சல் நிலையத்தில் துவங்கி, காவலர்கள், தாசில்தார் அலுவலகம், போக்குவரத்து துறை, துப்புரவு தொழிலாளர்கள், அரசு மருத்துவமனைகள் என பொதுவாகவே அரசு ஊழியர்களின் மீது பொதுமக்களுக்கு பெரிதான நல்ல அபிப்ராயம் கிடையாது.

ஆனால், அத்தி பூத்தாற்போல், அனைத்து துறைகளிலுமே நல்லவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு  மனிதாபிமானமும், அன்பும் அதிகமிருக்கும். கையூட்டுப் பெறுவதில்லை. 5 ரூபாய் டாக்டர், கையூட்டு பெறாத காவலர், தொலைத்த லட்சக்கணக்கான பணத்தை திரும்ப  ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் என அவ்வப்போது நாம் செய்திகளில் படித்திருப்போம்.



அப்படி ஒருவர், தண்டவாளத்தில் தவறி விழுந்தவரை ரெயில் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஓடோடிச் சென்று இழுத்து காப்பாற்றி இருக்கிறார்.  பெங்களூரூ, கே.ஆர். ரயில் நிலைய மேடையில் இரண்டு ரயில்வே போலீசார் நடந்து சென்றுக் கொண்டிருக்கின்றனர். அப்போது எதிரே தண்டவாளத்தில் ரயில் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. உடனே சமயோசிதமாக போலீசார் ஒருவர், பின்னால் திரும்பி ப்ளாட்பாஃர்ம் முழுக்க யாரும் இருக்கிறார்களா என்று பார்க்கிறார்.  அப்போது தண்டவாளத்தில் தவறி விழுந்து, மீண்டும் மேலே ஏறத் தெரியாமல் ஒருவர் தடுமாறுவதைப் பார்த்து, அசுர கதியில் அவரை நோக்கி ஓடுகிறார். 

ரயில் தண்டவாளம்

துரிதமாக செயல்பட்டு, ரெயில்வே போலீசார், அவருக்கு உதவி செய்து, அவரை பாதுகாப்பாக மேலே இழுத்து காப்பாற்றினார். அடுத்த சில நொடிகளில் ரெயில் பிளாட்பாரத்தை வேகமாக நெருங்குகிறது. இந்த சிசிடிவி வீடியோ காட்சியை ரெயில்வே அமைச்சகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பலரும் ரெயில்வே போலீசாரைப் பாராட்டி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web