வீடியோ.. அம்பானி மகன் நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்துவந்த பாசக்கார நாய் !!

 
dளக

இந்தியாவில் கோடீஸ்வரர், முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனந்த் அம்பானி, என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகளான தான் ராதிகா மெர்ச்சென்ட் என்பவரை மணம் முடிக்கவுள்ளார். இந்த தம்பதிக்கு நேற்று பிரம்மாண்ட விழாவில் மோதிரம் மாற்றி திருமணம் நிச்சயித்துக்கொண்டனர்.

ambani

இருவரின் நிச்சயதார்த்தமானது குடும்பத்தினர் நண்பர்கள் கலந்துகொண்டனர்.  திருமண நிச்சயத்தை குறிக்கும் லக்கின பத்திரிகை வாசிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளையும் இனிப்புகளையும் இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொண்டனர். பின்னர் நீடா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா நிச்சயதார்த்த நிகழ்வை அறிவித்தார். அதைத்தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இருவரும் குடும்பத்தின் மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அம்பானி வீட்டு செல்லப்பிராணியான நாய். ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மாற்றிக்கொள்ள நிச்சயதார்த்தம் மோதிரத்தை செல்லப்பிராணி எடுத்துவந்தது. 

ambani

ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் ஆற்றல் சார்ந்த வணிகங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். ராதிகா மெர்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் குழுமத்தின் இயக்குனாரக உள்ளார்.


 

From around the web