வீடியோ.. இந்த நகருக்கு என்னதான் ஆச்சு.. எப்போ பார்த்தாலும் விசித்திரமான விபத்தே நடக்கிறது !!

 
bn

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் அண்மைக்காலமாக சாலை விபத்துகள், விதிமுறை மீறல்கள் அதிகம் நடக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, வாகனம் ஓட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் முதியவரை ஒரு கிலோமீட்டருக்கு தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தப் பரபரப்பு குறைவதற்குள், பெங்களூருவில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஞான பாரதி நகரில் உள்ன உல்லால் சாலையில் கார் பேனட் மீது இளைஞர் ஒருவர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அலற, காரை நிறுத்தாமல் ஆக்ரோஷமாக மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு, ஒரு பெண் காரை ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பெண்மணி ஒட்டி வந்த காரும் தர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் வந்த காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கு காரணம் அப்பெண் பிரியங்கா தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சேதமடைந்த தனது வாகனத்தை சரி செய்து கொடுக்குமாறு தர்ஷன் பிரியங்காவிடம் கேட்டுள்ளார். ஆனால் பிரியங்கா காரில் இருந்து இறங்காமல் தர்ஷனுடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

fg

பின்னர் காரில் இருந்து இறங்குவது போல் நடித்து திடீரென காரை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி இருந்த தர்ஷன் காரின் முன்னே நின்று காரை நிறுத்த வேண்டும் முயன்றுள்ளார். 

ஆனால் பிரியங்காவோ எதையும் பொருட்படுத்தாமல் தர்ஷன் மீது காரை மோதியுள்ளார். அப்போது தர்ஷன் பிரியங்காவின் கார் பேனட் மீது விழுந்தார் அதைக் கண்டு கொள்ளாமல் காரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டி சென்றார். பின்னர் மடியில் இருந்த வாகன ஓட்டிகள் எச்சரித்ததால் அதன் பின்னர் பிரியங்கா காரை நிறுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக பிரியங்கா மற்றும் தர்ஷன் ஆகியோர் தனித்தனியே போலீசில் புகார் அளித்தனர். 

பிரியங்கா அளித்துள்ள புகாரில் தர்ஷன் மட்டும் அவரது நண்பர்கள் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இதே போல் தர்ஷன் விபத்தை ஏற்படுத்தி விட்டு தன்னை கொலை செய்யும் நோக்கில் வாகனத்தை இயக்கியதாக புகார் அளித்துள்ளார். இதை எடுத்து பிரியங்கா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

From around the web