கஞ்சா பயன்படுத்த வீடியோ!! வெளியிட்டவரை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
கஞ்சா

சமீப காலமாக இளம் தலைமுறையினர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் போதிலும் ஒரு சில இடங்களில் அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன.கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிளஸ்- மாணவி ஒருவர், சமூக வலைதளத்தில் தனக்கு கஞ்சா கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டிருந்தார். இதை பார்த்த பலர் பல்வேறு விதமான விமர்சனங்களை பதிவு செய்திருந்தனர். அதிலும் ஒருவர் குறிப்பாக செய்த செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கஞ்சா சாக்லெட்டுகள்
வீடியோவை பார்த்த மட்டான்சேரியை சேர்ந்த ஒரு நபர், பிகோதமங்கலத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு சென்றால் கஞ்சா கிடைக்கும் என்று கூறியதுடன், கஞ்சாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் தைரியமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வீடியோவும் வைரலானது.

இதைக்கண்ட பொது மக்கள் பலர் பெரும் கண்டனத்தை பதிவு செய்ததுடன், இந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை வைத்து புகார்களை அளித்தனர். அதன்பேரில் எர்ணாகுளம் மாவட்ட போலீஸ் கமிஷனர் பிரதீப், வீடியோ வெளியிட்ட ஆசாமி குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். 

போலீசாரின் தேடுதல் வேட்டையில், வீடியோ வெளியிட்டது, மட்டான்சேரி அருகே புத்தன்புரா வீட்டை சேர்ந்த பிரான்சிஸ் நெவின் அகஸ்டின்(வயது 34) என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நெவின் அகஸ்டினை எர்ணாகுளம் கலால் பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, 3 கிராம் கஞ்சா சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார், பிரான்சிஸ் நெவின் அகஸ்டினை எர்ணாகுளம் முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது

இந்த கஞ்சா குறித்த தொடர் வீடியோ மற்றும் கைது சம்பவம் குறித்து திருச்சூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஐஸ்வர்யா டோங்கேரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘கைதான நபர் நெவின் அகஸ்டின் வெளியிட்ட வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். தவறான நோக்கத்துடன் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். அவர்களுக்கு யார் மூலம் கஞ்சா கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுபோன்ற தவறான வழிகளை இளைஞர்கள், இளம்பெண்கள் பின்பற்றி செல்லக்கூடாது’’ என்று கூறினார்.எதற்கெல்லாம் செயல் விளக்கம் கொடுப்பது என்பதில் ஒரு வரைமுறை இல்லையா? என்று நெட்டீசன்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நெவின் அகஸ்டின் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web