திமுகவுக்கு கட்சி மாறிய ஊர் தலைவர்! ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் அடித்து பொதுமக்கள் எதிர்ப்பு!

 
ஊர் தலைவர்

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா... என்று இனி யாரும் பஞ்ச் டயலாக் எல்லாம் பேச முடியாது. விஞ்ஞான வளர்ச்சியில், உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது. ஒரு தவறு செய்தால்.. அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று வாக்களித்த பொதுமக்கள் பல இடங்களில் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். பதவிக்கு வந்ததும், சுய லாபத்திற்காக வாக்களித்த மக்களுக்கு நாமம் போடும் விதமான, ஆளுங்கட்சியில் சேர்கிறவர்களுக்கு பாடம் புகுட்டும் விதமாக, பா.ம.க.வில் இருந்து திமுகவுக்கு மாறிய ஊர் தலைவர் உட்பட கட்சி பிரமுகர்களை விமர்சிக்கும் வகையில் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து, கட்சி தாவலுக்கு பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊர் தலைவர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணங்காட்டுபாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு பா.ம.க. பெரும் பலத்துடன் இருந்து வருகிறது. இந்த ஊராட்சியில் இதுவரை ஒருமுறை மட்டுமே தேர்தல் நடைபெற்ற நிலையில் தலைவர் பதவியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படி இந்த முறையும் தனசேகர் (52) என்பவரை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். மேலும் அருண்குமார் (34) என்பவர் பா.ம.க.வின் ஒன்றிய செயலாளராகவும் இருந்து வந்தார். தற்போது நடந்து முடிந்த ஊராட்சி ஒன்றிய தேர்தலில் அருண்குமார் என்பவர் பா.ம.க.சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அருண்குமார் சுமார் 2,000 பேருடன் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி பா.ம.க.வில் இருந்து விலகி தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் பணங்காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரும் பா.ம.க.வில் இருந்து விலகி கடந்த ஜூன் மாதம் தி.மு.க.வில் சேர்ந்தார்.

ஊர் தலைவர்
இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க. ஆதரவாளர்கள் சிலர் அருண்குமார் வீட்டு சுவரில் ஏற்கனவே வரையப்பட்டிருந்த மாம்பழம் சின்னத்தின் மீது அநாகரீகமாக வார்த்தைகளை எழுதியுள்ளனர். இதற்கிடையில் தனசேகர் கட்சி மாறியதால் கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி பணங்காட்டுப்பாக்கத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தனசேகர் அனைவரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் தனசேகரின் உருவபொம்மையை இளைஞர்கள் தீ வைத்து ªரித்துள்ளனர். இது குறித்து தனசேகர் காயார் போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் இளைஞர்கள்ஒன்றிய குழு உறுப்பினர் அருண்குமார், ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், வார்டு உறுப்பினர் நரசிம்மன் ஆகிய 3 பேரின் புகைப்படத்தையும் கண்ணீர் அஞ்சலி போஸ்டராக தயார் செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். பா.ம.க. கட்சியில் இருந்து தி.மு.க.வுக்கு மாறியதால் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் உயிருடன் இருக்கும் கட்சி பிரமுகர்களின் புகைப்படம் இடம்பெற்றதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web