வைரல் வீடியோ!! மனிதத் தலையுடன் ஆட்டுக்குட்டி!! அசத்தல் ஆச்சர்யம்!!

 
மனித தலையுடன் ஆட்டுக்குட்டி

சர்வதேச அளவில் அதிசயங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு இடத்தில் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆன்மிக ரீதியாக இல்லாமல்  அறிவியல் பூர்வமாக அலசி ஆராய்ந்து மருத்துவ விஞ்ஞானிகள் அதன் உண்மை தன்மையை உலகுக்கு அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் மத்திய பிரதேசத்தில்  மனித முகத்தோற்றத்துடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது . இது அப்பகுதியில் வசித்து வருபவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சிரோஞ்ச் தாலுகாவிற்குட்பட்ட செமால் கெடி கிராமத்தில் வசித்து வருபவர் நவாப் கான்.இவர் ஒரு எருமை மாடு மற்றும் ஏழு ஆடுகளை வளர்த்து வந்தார். அதில் ஒரு ஆடு குட்டியை ஈன்றுள்ளது. அந்த ஆட்டுக் குட்டிதான் மனித முகத்துடன் பிறந்துள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.பிறந்த அந்த ஆட்டுக்குட்டி மனிதனைப் போலவே  கண்கள், வாய், மூக்கு இவைகளை பெற்றுள்ளது. கண்களைச் சுற்றி மனிதர்கள் கண்ணாடி அணிவது போன்று பெரிய கருவளையமும் உள்ளது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கண்களுக்கு அருகே அடர்த்தியாக இருக்கும் முடிக்கற்றைகள் மனிதர்களுக்கு இருக்கும் தாடியைப் போல இருக்கிறது.  

மனித தலை ஆட்டுக்குட்டி
இந்த அதிசய பிறப்பு குறித்து கால்நடை மருத்துவர்கள் விடுத்த செய்திக்குறிப்பில் "இப்படிப் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளுக்குத் தலை டிஸ்ஸ்பெசியா  வகையை சேர்ந்திருக்கும். 50000 விலங்கினங்களில் ஏதாவது ஒன்று இப்படி பிறப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இது வழக்கமான நிகழ்வு தான். மனிதர்கைல் சிலர் குரங்கு, ஓநாய் ,  போன்ற முக அமைப்பை உடையவர்கள் உண்டு . அது போல இதுவும் சாதாரணமான ஒன்று தான். மேலும் ஆடு கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டிருக்கலாம். அதற்கு சரியான மருத்துவம் செய்யாமல் தவறான மருந்துகளை கொடுத்திருக்கலாம். அதன் விளைவே மனித முகத்தை ஒத்த ஆட்டுக்குட்டி எனத் தெரிவித்துள்ளார்.  மருத்துவர் என்ன காரணம் கூறினாலும் இந்த ஆடு பிறந்த சில மணி நேரங்களிலேயே பிரபலமாகி விட்டது .சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள் இந்த ஆட்டுக்குட்டியை வியப்புடன் நேரில் வந்து பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web