வைரல் வீடியோ!! மலைப்பாம்பிடம் சிக்கி தவிக்கும் ஆட்டை காப்பாற்றும் சிறுவர்கள்!!

 
மலைப்பாம்பிடம் சிக்கிய ஆடு

பாம்பு வகைகளில் மிகவும் ஆபத்தானவை மலைப்பாம்புகளே. இவைகள் உயிருடன் இருக்கும் இரையை மட்டுமே பிடித்து சாப்பிடும். அதிலும் அவைகளை உயிருடன் முழுங்கி விடும். அந்த இரையை வசப்படுத்த தனது முழு உடல் பலனையும் பிரயோகிக்கும். அதாவது இரையை பிடித்த உடன் தனது உடலால் அந்த இரையை சுற்றிக்கொள்ளும். அவற்றை அப்படியே இறுக்கி அதற்கு வலி மற்றும் மூச்சுத் திணறலை கொடுக்கும்.

மலைப்பாம்பு

அந்த இரை உயிரிழந்ததும் அப்படியே விழுங்கி விடும்.  பொதுவாக மலைப்பாம்புகளிடம் பெரும்பாலும் ஆடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்கள் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்று.  அந்த வகையில் சமூக வலைதளங்களில்  ஆடு ஒன்றை மலைப்பாம்பு ஒன்று விழுங்க முயற்சிக்கும்  வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மலைப்பாம்பு ஆட்டை சுருட்டிய நிலையில், சிறுவர்கள் சிலர் ஆட்டினை காப்பாற்றியுள்ளனர். ஆடு பாம்பிடம் இருந்து விடுபடுவதற்காக  முழு போராட்டம் நடத்துகிறது.  அந்த ஆடு தன்னோடு பாம்பையும் சேர்த்துக்கொண்டு ஓட முயற்சிக்கிறது.  


கத்தி கூக்குரல் எழுப்புகிறது. ஆனால் மலைப்பாம்போ ஆட்டை விடுவதாக இல்லை. சில நொடிகளில்  ஆட்டினை முழுவதுமாக பாம்பு சுற்றிக்கொண்டது. வலியால் ஆடு கத்திய நிலையில், அருகில் இருந்த சிறுவர்கள் சிலர் பாம்பிடம் இருந்து ஆட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருவர் பாம்பின் தலையையும், மற்றொருவர் அதன் வாலையும் பிடித்து இழுத்து ஆட்டினை பத்திரமாக மீட்டெடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவிற்கு பலவிதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். துணிச்சலான சிறுவர்களுக்கு பாராட்டுக்கள் எனவும், வீடியோ எடுப்பதற்காக சிறுவர்கள் வேண்டுமென்றே இதனை அரங்கேற்றியிருப்பதாகவும்  தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web