வைரல் வீடியோ!! ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பை பெறும் இந்தியா!! மோடி பெருமிதம்!!

 
மோடி

இந்தோனேஷியாவின் பாலி நகரில் ஜி20 மாநாடு நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமைப்பில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, இந்தியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், சீனா, இந்தோனேசியா, தென் கொரியா  நாடுகள் இணைந்து உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பாக  இருந்து வருகிறது. 



இந்த மாநாட்டில் சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் ஆகிய தலைப்புக்களின் கீழ் உலக தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.  உக்ரைன் போர் காரணமாக ரஷிய அதிபர் புதின்  மட்டும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இந்த பேசிய இந்திய பிரதமர் மோடி ஜி 2023ல் ஜி20 தலைமைப் பதவியை இந்தியா கைப்பற்றுவதாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு  ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் எனவும்,  இந்தியாவின் முக்கிய நகரங்களில்  ஜி20 கூட்டங்கள்  ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார் 

மோடி
 இந்த அமைப்பில் இணைந்துள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுபடுவோம். உலக மாற்றத்தின் கருவியாக இந்த  ஜி-20 உச்சிமாநாடு அமையட்டும். மேலும் இந்த மாநாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.  ஜி-20 உச்சி மாநாட்டின் தலைமை பதவியை 2023ல் இந்தியா ஏற்க இருப்பதற்கு  உலக நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்து வருகின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web