வைரல் வீடியோ!! மாட்டிக்கிச்சு!! மேம்பாலத்தில் சிக்கிக் கொண்ட விமானம்!!

 
விமானம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழிலை விரிவுபடுத்தி புதுமையை புகுத்தும் வகையில் பழைய விமானத்தை வாங்கி அதனை ஓட்டலாக மாற்ற முடிவு செய்தது. இதற்காக கொச்சியில் ஒரு பழைய விமானத்தை வாங்கியது.இந்த விமானத்தை சாலை மூலம் ஐதராபாத் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது.


இதற்காக ராட்சத லாரியில் விமானம் ஏற்றப்பட்டது. சாலைகளின்  வழியே விமானம் சென்றதை பலரும் ஆர்வத்துடன் பார்த்து மொபைல் போனில் படமாக பதிவு செய்து கொண்டனர். ஆந்திர மாநிலம் ​​பாபட்லா மாவட்டம் மேதரமெட்லாவில் சென்று கொண்டிருந்தபோது  மேம்பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. சம்பவம் அறிந்து அந்த பகுதியில் சூழ்ந்த பொதுமக்கள் இதனை கண்டு கழித்ததுடன் வீடியோவாகவும் பதிவு செய்து  கொண்டனர்.

மேம்பாலத்தில் இருந்து அந்த விமானத்தை சேதமின்றி மீட்கும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மேம்பாலம் அமைந்த சாலை 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் சாலை இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாற்று வழியில் விமானம் ஐதராபாத் கொண்டுவரப்படும் என பிஸ்தா ஹவுஸ் நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web