வைரல் வீடியோ!! இளம்பெண் கேமராவில் மறையும் வினோதம்!! அசத்தல் மேஜிக்!!

 
மேஜிக் பெண்

மேஜிக்குகள் எப்போதுமே ஆர்வத்தை தூண்டக்கூடியவை. அவை எல்லாம் ஏமாத்து வேலை எனத் தெரிந்த போதும், அதனைசெய்யும் வித்தையை அறிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வமாகவே இருப்பர். அப்படி ஒரு மேஜிக்கை ஜப்பானிய பெண் ஒருவர் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த மேஜிக் வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் துணியை போல ஒன்றை பயன்படுத்தி தனது உடல் முழுவதையும் மறையச் செய்கிறார்.


ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்ணுக்கு தெரியாததை கண்டுபிடித்தனர் என அட்டகாசமான தலைப்பும் கொடுத்துள்ளார். ஒரு அலுவலகத்தில் பெண் ஒருவர் மேஜிக் துணியை கொண்டு தனது உடலை மறைக்கிறார். அப்போது அவரது உடல் மறைந்து அவருக்கு பின்னால் இருப்பது கண்ணாடி போல் தெரிகிறது. அடுத்ததாக அதே  துணியை வைத்து தனது உடல் முழுவதையும் மறைத்து விடுகிறார். கண்ணுக்குத் தெரியாத துணியை பயன்படுத்தி தனது உடலை மறைத்தது போல் தோன்றுகிறது.

இருந்தாலும்  பச்சை நிற திரையை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் எடிட்டிங் செய்து இந்த வீடியோவை எடுத்ததாக சிலர் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.  வீடியோவின் ஓரத்தில் பச்சை நிற திரை தெரிவதாகவும் கமெண்ட் அடித்துள்ளனர். மேஜிக் துணியை பயன்படுத்தி உடலை மறைக்கும் மற்றொருவரின் வீடியோவை வெளியிட்டு இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தது ஜப்பானியர்கள் கிடையாது என கிண்டலாக ஒருவர் பதில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த வீடியோவை இதுவரை11 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web