வைரல் வீடியோ!! சூப்பர் ஸ்டாருடன் நடிகர் மாதவன், நம்பி நாராயணன்!!

 
ராக்கெட்ரி

சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.இப்படத்தை நடிகர் மாதவன் தயாரித்து, இயக்கியுள்ளார்.  


ராக்கெட்ரி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்  எனவும், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பார்க்கவேண்டும் எனவும் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் ராக்கெட்ரி படத்தை எடுத்ததற்காக மாதவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்ட ரஜினி காந்த் முதல் படத்திலேயே அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுக்கு இணையாக மாதவன் படத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். 

ராக்கெட்ரி
தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம்,  தெலுங்கு என  5 மொழிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ராக்கெட்ரி படத்தில் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் மாதவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை  பெற்றார். இந்த சந்திப்பில் விஞ்ஞானி நம்பி நாராயணனும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு குறித்து நடிகர் மாதவன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?