வைரல் வீடியோ!! அமெரிக்க பெண் இந்திய பெண் மீது நிறவெறி தாக்குதல்!! பகீர்!!

 
அ


அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரின் ஒரு பார்க்கிங் பகுதியில் நேற்று முன்தினம் (24ம் தேதி) இந்த சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகன் அமெரிக்கனான எஸ்மரால்டா உப்டான் என்ற பெண், அராஜகமான முறையில் நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனக்குதானே பேசிக் கொண்ட எஸ்மரால்டா அங்கிருந்த இந்திய வம்சாவளி பெண்களை திடீரென்று தாக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அதில், ‘‘நான் எங்கு சென்றாலும், அங்கு இந்தியர்கள் இருக்கிறார்கள். இந்தியா வாழ்வதற்கு நன்றாக இருந்தால் ஏன் இங்கு வருகிறீர்கள்? இந்தியர்களாகிய உங்களை நான் வெறுக்கிறேன். சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக அமெரிக்கா வருகின்றனர்’’ என்று உரத்த குரலில் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுகிறார். நிறவெறியை தூண்டும் வகையில் அவர் பேசிய பேச்சுகள் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணுக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதத்தை விதித்துள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபர் தனது பதிவல், ‘‘3 நண்பர்களுடன் எனது தாயார் சாப்பிட சென்ற போது, இந்த சம்பவம் நடந்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தியர்கள் மீதான நிறவெறி தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க பெண்ணால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web