வைரல் வீடியோ!! காதலியிடம் மண்டியிட்டு சம்மதம் கேட்கும் கிரிக்கெட் வீரர்!!

 
கிஞ்சித்ஷா

இந்தியாவிடம் தோற்ற கையோடு, தனது காதலியிடம் இருந்து திருமணத்திற்கு கிரீன் சிக்னல் வாங்கிய ஹாங்காங் அணி கிரிக்கெட் வீரர் தற்போது ட்விட்டரில் டிரண்டிங்காகி வருகிறார்.ஆசிய கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27ம் தேதி அமீரகத்தில் தொடங்கியது. இதில் கடந்த புதன்கிழமை நடந்த போட்டியில் ஹாங்காங் கிரிக்கெட் அணியை எதிர்த்து இந்தியா விளையாடி வெற்றி பெற்றது. அப்போது ஹாங்காங் கிரிக்கெட் அணி வீரர் கஞ்சித் ஷா தனது காதலியிடம் திருமணத்திற்கான விருப்பத்தை மைதானத்திலேயே தெரிவித்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.இந்தியா மற்றும் ஹாங்காங் இடையேயான ஆசிய கோப்பை போட்டிக்கு பிறகு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஹாங்காங் கிரிக்கெட் வீரர் கிஞ்சித் ஷா,  தான் சந்தித்த 28 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். இருப்பினும் இந்தியா வெற்றிவாகை சூடியது. இதனால் வேதனையடைந்த கிஞ்சித் ஷாவை தேற்றும் நோக்கத்தில் அவரது காதலி நினைத்த போது அங்கு தான் ட்விஸ்ட்.

காதலியின் முன் மண்டியிட்ட வீரர் கிஞ்சித் ஷா, தான் வைத்திருந்த மோதிரத்தை கையில் எடுத்து, “என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என்று காதலியிடம் கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத காதலி, வீரரின் திருமண விருப்பத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்தார். 

ஹாங்காங் வீரர் கிஞ்சித்ஷா மும்பையை பூர்வீகமாக கொண்டவர். இவரின் தந்தை ஒரு வைர வியாபாரி. கிஞ்சித்ஷா 3 மாத குழந்தையாக இருக்கும் போது அவரது குடும்பம் ஹாங்காங்கிற்கு இடம்மாறியது.

கிஞ்சித்ஷாவின் காதல் அனுமதி மைதானத்தில் அரங்கேறிய அழகிய காட்சியை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் கணக்கில் வெளியிட்டு, இருவரின் புதிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது காதலியிடம் மைதானத்தில் வைத்து திருமணத்திற்கான விருப்பத்தை காதலியிடம் தெரிவித்தது பெரிய அளவில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web