வைரலாகும் வீடியோ!! கொரோனா பரிசோதனைக்கு பயந்து தெறித்து ஓடும் மக்கள்!!

 
ஓடும் மக்கள்

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் வூகாண் நகரில் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பூசி உட்பட  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் கொரோனாவிலிருந்து மீளத் தொடங்கியுள்ளன.


இந்நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2000க்கும் அதிகமாக  பதிவாகி வருகிறது.உலக நாடுகள் மீண்டு வரும் வேளையில்  சீனாவில் கொரோனா மீதான பயம் இன்னும் சற்றும் குறையவில்லை. இதனை நிரூபிக்கும் வகையில் சில தினங்களுக்கு முன் சீனாவின் ஷாங்காய் நகரில் 6 வயது சிறுவன்  ஷாப்பிங் மாலுக்கு சென்றபோது அவனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.


அவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மாலுக்கு சீல் வைத்தனர். அத்துடன் ஷாப்பிங் மாலுக்கு உள்ளே இருந்த வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ சோதனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் பரிசோதனை செய்து கொள்ள் முடியாது என முண்டியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில்  வெளியாகி பெரும் வைரலாகி வருகின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?