வாட்ஸ் அப்பிற்கு எச்சரிக்கை!! கெடுபிடி காட்டும் உயர்நீதிமன்றம் !!

 
வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் நிறுவனம் தனியுரிமைக் கொள்கைகளை திருத்தி அமைத்ததுடன், அதனை ஏற்று கொள்ளாத பயனர்களின் கணக்கு, பிப்ரவரி 8ம் தேதிக்கு பின் நீக்கப்படும் என்று திடீரென்று அறிவிப்பை வெளியிட்டது. இது பல்வேறு தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி பெரும் சர்ச்சை வெடித்தது.

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனாளர்களின் தகவல்களை அதன் இணை நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்வதாகவும் வாட்ஸ் அப் பயனாளர்கள் குற்றம்சாட்டினர். இதன் விளைவாக வாட்ஸ் அப்பின் பயன்பாடு குறைந்து சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு பயனாளர்கள் மாறத் தொடங்கினர்.

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்பின் திருத்தியமைக்கப்பட்ட தனியுரிமை கொள்கையை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி சதீஷ்சந்திர சர்மா அமர்வு முன்பு நடந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறும்போது, ‘‘வாட்ஸ் அப்பின் திருத்தியமைக்கப்பட்ட புதிய தனியுரிமைக் கொள்கைகளைப் பயனர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் ‘ஏற்றுக்கொள் அல்லது வெளியேறு’ என பயனாளர்களை எச்சரித்து, தனது கொள்கைகளுக்கு ஒப்புதல் பெற தந்திரமாக ஏற்றுக் கொள்ள வைக்கிறது. மேலும் வாட்ஸ் அப் பயனாளர்கள் குறுஞ்செய்தி மூலம் புதிய கொள்கைகளை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த செயல் இந்திய போட்டி நிறுவனங்கள் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாக உள்ளது’’ எனறு கண்டித்தனர்.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு அப்டேட்கள் தொடர்ந்து கிடைத்து வந்தாலும், அதன் மாற்றியமைக்கப்பட்ட தனியுரிமை கொள்கைகளை ஏற்றுக் கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயனாளர்களுக்கு தலைவலி கொடுப்பது நிதர்சனமான உண்மை. இது குறித்த வழக்கில் இன்னும் இறுதிகட்ட தீர்ப்பு எட்டப்படாத நிலையில் தற்போது நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளது பயனாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web