மறுபடியும் மொதல்... ல இருந்தா!! தமிழகம் முழுவதும் காய்ச்சலால் நிரம்பி வழியும் குழந்தைகள் வார்டுகள்!! உஷார்!!

 
வார்டு

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  மழையும் , வெயிலும் மாறி, மாறி இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு வைரஸ் காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்புக்கள் அதிகம் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சென்னையில்  அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற வரும் குழந்தைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

எழும்பூர் குழந்தைகள் வார்டில்  உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன. கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதே போல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் குழந்தைகளிடையே காய்ச்சல் அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகாலமாக மக்கள் கொரோனா பரவல் காரணமாக சமுக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வந்தனர். அதன் காரணமாக காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகள் குறைந்து இருந்தன. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பொதுமக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.

இதனால் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சுவாச நுண் குழல் அழற்சி வைரஸ் உள்ளிட்ட புதிய வகை வைரஸ்கள் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளன. இதன் காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகள் கடுமையான காய்ச்சல், நடுக்கம், கடும் களைப்பு, தலைவலி, உடல்வலி, தொண்டையில் வறட்சி, வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறார்கள். சுமார் ஒரு வார காலம் நீடிக்கும் இந்த உடல்நலக் குறைவு காரணமாக குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதுபோன்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது மற்ற மாணவர்களுக்கும் இந்த காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுகிறது.

காய்ச்சல்

இதில் இருந்து தப்பிக்க எப்போதும்  கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்’’ என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.சமீப காலமாக குழந்தைகள் சிகிச்சை பெற மருத்துவமனைகளில் குவிவதை காண முடிகிறது. இதனால் பெற்றோர்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

From around the web