அவ இல்லாம வாழ முடியாது..தோழியுடன் தனிக்குடித்தனம் நடத்திய கல்லூரி மாணவி! தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!

 
லெஸ்பியன்

தோழியுடன் தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோர்களும், போலீசாரும் எவ்வளவோ முயற்சித்தும் அந்த காதல் ஜோடியைப் பிரிக்க முடியவில்லை.. காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த போது, பாத்ரூம் போவதாகச் சொல்லி சென்ற கல்லூரி  மாணவி, பிளேடால் சராமாரியாக தன்னை அறுத்துக் கொண்டதும் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் போலீசாரும் அதிர்ந்து தான் போனார்கள்.

தர்மபுரியைச் சேர்ந்த மாணவி, சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தங்களது மகள் காணாமல் போனதாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் மாணவி குறித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

காதல்

காணாமல் போன கல்லூரி மாணவி  கோவையில் கண்டு பிடிக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தான் முதலாமாண்டு கல்லூரியில் சேர்ந்த போது, தனது சீனியரான 3ம் ஆண்டு மாணவியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு நாளடைவில் தன் பாலின காதலாக மாறியதாக கூறியிருக்கிறார். அதன் பின்னர், சீனியர் மாணவி கல்லூரிப் படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நிலையிலும் இவர்களது பழக்கம் தொடர்ந்துள்ளது.

இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே விஷயம் பூதாகரமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் சந்தித்துக் கொள்ள பெற்றோர்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் இருவரும் கோவையில் தனி வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இருவரையும் தர்மபுரி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, இருவருக்கும் போலீசார் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

காதல்

அப்போது மாணவி கழிவறைக்கு செல்வதாக சொல்லி விட்டு பிளேடால் கழுத்து, கைகளில் சரமாரியாக அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவியை மீட்ட போலீசார், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மீண்டும் பெற்றோர்களிடம் செல்ல மறுத்து, வேண்டுமானால் காப்பகத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று கல்லூரி மாணவி கூறியது கேட்டு பெற்றோர் கதறியழுதனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web