இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு: வனிலை ஆய்வு மையம்

மேற்கு  திசை காற்றின் வேக மாறுபாடு  காரணமாக,  இன்றும்  நாளையும்  தமிழ்நாடு,  புதுவை  மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு  வாய்ப்பு.

 
வானிலை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வரும் 26ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக  சிவகங்கை மாவட்டம்  தேவகோட்டை , செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்  ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர்  4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து  இன்றும் நளையும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  மணிக்கு  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்  என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

From around the web