அட்றா சக்கை! குடிபோதையில் குத்தாட்டம் போட்ட நாட்டின் பிரதமர்! வைரலாகும் வீடியோ!

 
சன்னா மரீன் சன்னா மரீன்

குடி போதையில், அரைகுறை ஆடையில், ஒரு நாட்டின் பிரதமரே குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பின்லாந்து நாடு கல்விக்காகவும் அங்குள்ள கல்விமுறைக்காகவும் பெரிதும் பேசப்படும் நாடு.  இங்குள்ள கல்வி திட்டங்கள் பல நாடுகளில் முன் மாதிரியாக வைக்கப்படுகின்றது. பலரும் பின்லாந்து நாட்டிற்குச் சென்று  கல்வி முறை குறித்து தெரிந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பின்லாந்தின் ஆளும் ஜனநாயக சமூக கட்சியின் பிரதமராக சன்னா மரீன் பதவி வகித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டில் தனது 34 வயதில் பிரதமர் பதவி ஏற்று உலகின் இளம் வயது பிரதமர் என்ற பெருமை பெற்ற இவர், தனது அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் மது விருந்தில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. 



ஒரு நாட்டின் பிரதமர் பொறுப்பின்றி இருப்பதாக சன்னா மரீனாவுக்கு பல தரப்பினரிடம் இருந்து கண்டனமும் விமர்சனமும் குவிந்து வருகிறது. இந்நிலையில் பார்ட்டியில் மதுவை தவிர வேறு போதை பொருட்களை பயன்படுத்தவில்லை எனவும், நடனமாடியது, பார்ட்டி செய்தது எல்லாம் சட்டப்படியான விஷயங்கள் என்றும் சன்னா மரீன் விளக்கம் அளித்துள்ளார். 

இந்நிலையில், இவர் போதைமருந்து பரிசோதனை எடுக்க வேண்டும் என அந்நாட்டின் தலைவர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கி உள்ளனர். பிரதமர் சன்னா மரீன் சர்ச்சையில் சிக்குவது முதல் முறை அல்ல. கடந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் நைட் கிளப் சென்று பார்ட்டியில் ஈடுபட்டு சன்னா மாரின் சர்ச்சையில் சிக்கினார். கடந்த டிசம்பர் மாதம் இரவில் கிளப்பில் பார்ட்டிக்கு சென்று விடிய விடிய பார்ட்டி செய்தார்.


அந்த நேரத்தில் அவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த விவரத்தையும் மறைத்தது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். 2019ம் ஆண்டில் நாட்டின் இளம் பிரதமரான இவர் நண்பர்களுடன் பொழுதை கழித்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் "பிரதமருக்கு தகுதியானவர் அல்ல" என்று எதிர்க்கட்சிகள் விமரசனம் செய்தனர். மேலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?